மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ஹேமா கமிட்டி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது பற்றி எனக்கு தெரியாது. கூலி திரைப்படம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. கார் பந்தயத்துக்கு வாழ்த்துக்கள். அதை பார்க்க நேரம் இல்லை” எனத் தெரிவித்தார்.