Advertisment

”இபிஎஸ் முதல்வர் ஆவார் என கனவில்கூட  நினைத்திருக்க மாட்டார்” - ரஜினிகாந்த் பேச்சு!

நடிகர் கமல்ஹாசனின் அறுபது ஆண்டு கால சினிமா பங்களிப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 'கமல் 60’ எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிசென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் கச்சேரி நடந்தது. கமல்ஹாசனுடன் நடித்த நடிகர், நடிகைகள், பிரபலங்கள்,உடன் பணியாற்றியவர்கள் வருகை தந்திருந்தனர்.

Advertisment

rajinikanth speech

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எங்களின் கொள்கைகள், சித்தாந்தங்கள் மாறலாம். ஆனால் எங்கள் இருவரின் நட்பு எப்போதும் தொடரும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வராவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அதுபோல தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும்”என்றார்.

ஆரம்பத்தில் அரசியலற்ற கலைநிகழ்ச்சியாகத் தொடங்கி, பின்னர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து அரசியலில் செய்லபட வேண்டும். அவர்கள் விரும்பும் அளவுக்கு ஆட்சியை தந்துவிட்டு பின்னர் அவர்களது தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்” என்று கூறி அரசியல் பேச்சை தொடங்கி வைத்தார். பின்னர், இது குறித்துப் பேசிய சரத்குமார், “இதற்கு என்னிடம் பதில் எதிர்பார்க்காதீர்கள். இது சட்டமன்றம் என்றால் நான் பதில் கூறியிருப்பேன், இது கலைமன்றம்” என்று கூறினார். பின்னர் பேசிய ரஜினிகாந்த், மேலே குறிப்பிட்டவாறு பேசினார்.

admk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe