சாலமன் பாப்பையா எழுதியபுறநானூறு புதுவரிசை என்ற நூலின்நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகியான திருச்சி சிவா மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர்ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

rajini rajini

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், கம்பருக்கு எப்படி ராமாயணம் எழுதியதனால் பெருமை ஏற்பட்டதோ அதேமாதிரிதான் இந்த நூல். இந்த நூலை எழுதி இருப்பதால் சாலமன் பாப்பையா அவர்களுக்கு மிகப் பெரிய புகழ் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது. காலம் பேசாது. என்ன அதிசயம் ஆனால் காலம் தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என அவர்கூறினார்.