narayanasamy

Advertisment

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- ‘’மதசார்பற்ற அணிகளை ஒன்றினைக்கும் வேலையில் ராகுல்காந்தி ஈடுபட்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் மதச்சார்பற்ற அணியின் தலைமையிலான ஆட்சி அமையும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடையதல்ல. அவருடைய கருத்து அப்பகுதி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. எந்தவொரு விஷயத்திலும் முழுவதுமாக தெரியாமல் கருத்து கூற கூடாது. ரஜினிகாந்த் பெருந்தன்மை உள்ளவர் என்றால் தன்னுடைய கருத்தை திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்ட ஆதாரம் இருந்தால் அதை அவர் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். ரஜினையை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பது போல்தான் உள்ளது.’’