Advertisment

’பாம்பும் நோகக்கூடாது, தடியும் உடையக்கூடாது என்கிறார் ரஜினிகாந்த்’ - திருமாவளவன்

ra

சபரிமலை விவகாரத்தில் ரஜினிகாந்த் ‘’எல்லாவற்றிலும் பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு சம்பிரதாயம், ஐதீகம் இருக்கிறது. அதில் யாரும் தலையிட முடியாது என்பது என் கருத்து. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதே நேரத்தில் மதம் தொடர்பான விசயங்கள் , சடங்குகளில் பார்த்து செய்ய வேண்டும்’’ என்று தனது கருத்தை கூறியிருந்தார்.

Advertisment

தி

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ’’பாம்பும் நோகக்கூடாது, தடியும் உடையக்கூடாது என்கிற ரீதியில் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார். சபரிமலை விவகாரத்தில் ஐதீகம், பாரம்பரியம் என்பதை பார்க்கக்கூடாது. ஆண், பெண் சமத்துவத்தை மட்டுமே பார்க்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Thirumavalavan rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe