Advertisment

#MeTooவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்த ரஜினிகாந்த்!

ra

#MeToo விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisment

பேட்ட படத்தின் படப்பிடிப்பில் கடந்த 40 நாட்களாக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

Advertisment

அப்போது அவரிடம், மீடூ விவகாரம் குறித்தும், கவிஞர் வைரமுத்து மீது சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் கேள்வி எழுப்பியபோது, ‘’பெண்களுக்கு சாதகமான ஒன்று மீ டூ. அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. சரியாக பயன்படுத்த வேண்டும். வைரமுத்து தன் மீதான மீ டூ குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று வைரமுத்து கூறியுள்ளார். மேலும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வழக்கை சந்திப்பதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்’’என்று கூறிய ரஜினியிடம், மீடூவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘’அது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது’’என்று சொல்லிவிட்டு நழுவினார்.

meetoo Vairamuthu rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe