Advertisment

 ரஜினிக்கு நன்றி சொன்ன பியூஷ் கோயல்

பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அவர் இன்று சென்னைக்கு வந்தார். பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

ப்

அப்போது அவர், நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி. பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும். 2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்’’என்று தெரிவித்தார்.

Advertisment

அவர் மேலும், நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக் கொண்டோம் என்றார்.

piyushgoyal rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe