ADVERTISEMENT

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ரஜினியை சந்தித்த காரணம் என்ன?

10:14 AM May 25, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற் கடித்து வெற்றி பெற்றார். ஆனால் தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதியில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் மட்டும் தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார் தொடர்ந்து இழுபறிக்கு பின் வெற்றி பெற்றார். அதிலும் கூட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

அப்படி இருந்தும் லோக்கலில் இருந்து கொண்டே ஓபிஎஸ் வராமல் மகனுடன் மாவட்ட செயலாளரை அனுப்பி எம்.பி. சான்றிதழை வாங்க வைத்தார். அதன் பின் ரவீந்திரநாத் குமாரும் எம்பி. சான்றிதழுடன் சென்னை சென்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து ஆசி பெற்றவர், அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சந்தித்து ரவீந்திரநாத் குமார் ஆசி பெற்றார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென ஒபிஎஸ் மகன் சந்தித்த மர்மம் என்ன என்று மாவட்ட பொறுப்பில் உள்ள சில ர.ர.களிடம் கேட்டபோது..‌..

‘’ஓபிஎஸ் தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை கண்டு கொள்ளாமல் இருந்தார். அந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் கூட ஓபிஎஸ் தனது மகனுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோடியையும் ஓபிஎஸ் கூடிய விரைவில் சந்திக்க இருக்கிறார்.

இந்த நிலையில் தான் பிரதமர் மோடியிடம் நெருக்கமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததை திடீரென ஓபிஎஸ் மகன் சந்தித்து மத்திய மந்திரி பதவிக்காக பிரதமர் மோடியிடம் பரிந்துரை செய்ய வலியுறுத்தி ‌இருக்கிறார். அந்த அளவிற்கு ஓபிஎஸ் தனது சுயநலம் மூலம் மகனை வெற்றி பெற வைத்து மத்திய மந்திரி பதவியையும் வாங்கி கொடுக்க ஆர்வம் காட்டி வருகிறாரே தவிர, இந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தும் கூட அதை கண்டு கொள்ளாமல் ஓபிஎஸ் தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினி வரை ஓபிஎஸ் தனது மகனுக்காக காய் நகர்த்தி வருகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT