Skip to main content

“உன் வாழ்க்கை உன் கையில்...” - ரஜினி கொடுத்த நம்பிக்கை

Published on 01/01/2023 | Edited on 01/01/2023

 

rajinikanth new year wishes

 

2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதால், நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனாவிற்கு முந்தைய உற்சாகத்துடன் நாட்டு மக்கள் குடும்பத்துடன் கேக் வெட்டி ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் புதிய ஆண்டில் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில்,  உன் வாழ்க்கை உன் கையில் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதே போன்று நடிகர் கமல்ஹாசன், வைகோ, சரத்குமார், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

''இன்னும் அதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை''-ரஜினிகாந்த் பேட்டி

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
nn

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று  வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.

இந்நிலையில் இமயமலை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் திமுக கூட்டணி தலைவர், என்னுடைய அருமை நண்பர், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியே என்னுடைய நண்பர் சந்திரபாபுநாயுடு ஆந்திர பிரதேசத்தில் பெரிய வெற்றி அடைந்துள்ளார். அவருக்கும் என என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மத்தியில் என்டிஏ மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்கப் போகிறது. மூன்றாவது முறை மோடி பிரதமராக பதவி ஏற்கப் போகிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் 'நீங்கள் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா? எனக் கேட்டதற்கு, ''இன்னும் அதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை'' என்றார்.  

Next Story

'நோ கமெண்ட்ஸ்...'- இமயமலை செல்லும் ரஜினி!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
 'No comments...'- Rajini going to the Himalayas

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். இதற்கிடையில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில்  நாளை தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று  நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார். அதேநேரம் நடிகர் ரஜினிகாந்த்  இன்று இயமலை கிளம்பியுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்தை சூழ்ந்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

'மீண்டும் மோடி ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''சாரி பொலிடிகல் கேள்வி கேட்காதீர்கள்' என்றார். இசையா? கவிதையா? என்ற போட்டி தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது என்ற கேள்விக்கு, 'அண்ணா... நோ கமெண்ட்ஸ்' என கையெடுத்து கும்பிட்டார்.  'ஆன்மீகம் என்பது சாந்தி சமாதானம் அது உலகத்துக்கே தேவை. கேதர்நாத், பத்ரிநாத், பாபா கேவ்க்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.