பிரபல கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ்(வயது 66) காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக பெங்களூரூ விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுகாலமானார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
காங்கிரஸ் ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அம்பரீஷ். அவர் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதல்வர் நேரில் சென்று அஞ்சல் செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கடந்த 2014ம் ஆண்டே சிறுநீரகக் கோளாறு மற்றும் மூச்சு திணறல் காரணமாக பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அம்பரீஷின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்திய தாலேயேஅவர்சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர்பதிவில் ''அருமையான மனிதநேயம் கொண்ட என்னுடைய தோழனை இழந்துவிட்டேன். இன்று அவரைப் பிரிந்து வாடுகிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய விரும்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.