Advertisment

மோடி பதவியேற்பு விழாவில்  நான்  கண்டிப்பாக கலந்துகொள்வேன் - ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி, மோடி என்கிற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி ஆகும். பொதுவாக, தலைவர்களை வைத் துதான் அந்தந்த கட்சிகளுக்கு வெற்றி கிடைத்து வருகிறது. நேருவுக்கு பின் இந்திராகந்தி, ராஜீவ்காந்தி மக்களை ஈர்க்கும் தலைவர்களாக இருந்தாரக்ள். ராஜீவ்காந்தியை காலம் பலி கொடுத்துவிட்டது. இதன் பின்னர் வாஜ்பாய் மக்களை ஈர்க்கும் தலைவராக இருந்தார். அடுத்து மோடி மக்களை ஈர்க்கும் தலைவராக உள்ளார்.

Advertisment

ர்

தமிழ்நாடு , ஆந்திரா, கேரளாவை தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மோடிக்கு ஆதரவான அலையே வீசியது. மீத்தேன், ஹைட்டோகார்பன், நீட் ஆகிய விவகாரங்கள் மோடிக்கு எதிரான அலைக்கு காரணமாக இருந்தது. நான் இந்த விழாவில் கண்டிப்பாக கலந்துகொள்வேன்’’ என்று தெரிவித்தார்.

Advertisment

modi rajnikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe