Published on 08/08/2022 | Edited on 08/08/2022

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் டெல்லி சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்ததாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது தமிழக ஆளுநருடன் இந்தச் சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்க்கது.