தமிழகத்தில் மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

Advertisment

Rajinikanth-LocalBodyElections

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. அதனால் ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ தேர்தலில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடியைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.