
'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
"மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்பவும் இல்ல" தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.
இந்நிலையில், ரஜினியின் இந்த நிலைப்பாட்டுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்ததுக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி,ரஜினியை பா.ஜ.கதான் இயக்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.அ.தி.மு.க.,தி.மு.கவில்ஆளுமையான தலைமைகள் இல்லை. உடல்நிலை சரியில்லை என்றாலும் மிகத் துணிச்சலாக நடிகர் ரஜினிகாந்த் கட்சிதொடங்குகிறார்.ரஜினியைப்பின்னால் இருந்து யாரும் இயக்க முடியாதுஎன்றார்.
Follow Us