ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம்கான் 'தர்பார்'. ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Advertisment

rajinikanth-darbar-audio-aunch

பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், யோகி பாபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சங்கர், இசையமைப்பாளர் அனிருத் என பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு ரஜினியை வாழ்த்திப் பேசினர்.

இந்த விழாவில் அண்ணாமலை தீம் மியூசிக்குடன் மாஸாக என்ட்ரி கொடுத்த ரஜினி, எனது பிறந்தநாளை ரசிகர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். பின்னர் சினிமாவிற்கு வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவரால் அவமதிக்கப்படதாகவும், அதனால் கோடம்பாக்கம் சாலையில் வெளி நாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டாகவும் தெரிவித்தார். பின்னாளில் எண்ணியது போலவே இத்தாலி கார் ஒன்றை வாங்கி, அந்த தயாரிப்பாளரால் அவமதிக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்தி சிகரெட் பற்ற வைத்தேன் என்றார்.

Advertisment

மேலும் ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது என்று கூறிய அவர் தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி என்றார்.