Advertisment

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை!

hj

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Advertisment

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த்இன்று காலை 10 அணி அளவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தொலைபேசி வாயிலாக சில தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்மையில், ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு மற்றும் உடல்நலம் குறித்து வெளியான அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த், "அந்த அறிக்கை தன்னால் வெளியிடப்படவில்லை. ஆனால் உடல்நலம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்த தகவல் உண்மைதான்" என விளக்கமளித்திருந்தார். அதேபோல், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்ட்டர்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அவர் மேற்கொள்ள இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisment

Chennai Meeting rajini makkal mandram rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe