Rajinikanth comments on Vijay's party convention

Advertisment

கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய்யின் உரையில் 'தங்கள் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என குறிப்பிட்டு பேசியிருந்தார். அதேபோல் ஊழல் கபடதாரிகளையும், பிளவுவாத சக்திகளாக செயல்படுபவர்களையும் தங்களுடைய எதிரிகள் என விஜய் குறிப்பிட்டு பேசி இருந்தார்.

விஜய்யின் பேச்சு குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றி பெற்றுள்ளதாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் குவிந்த தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் வெளியே வந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர். ''அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்'' என்றார்.

Advertisment

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'நடிப்பு துறையிலிருந்து ஒருவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். மாநாடு நடத்தியுள்ளார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பியதற்கு, ''விஜய்யின் தவெக மாநாடு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடைந்து விட்டது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

'அவர் பேசிய விஷயங்களை எல்லாம் கவனித்தீர்களா?' என்ற கேள்விக்கு, 'ரொம்ப நன்றி' என கையெடுத்து கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றார்.