rk

நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்து அங்கே சிகிச்சை பெற்று வரும் கலைஞரை பார்த்து அவரின் நலம் அறிந்தார்.

Advertisment

திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் குறைந்து கோபாலபுரம் இல்லத்திலும், பின்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் அரசியல் கட்சி தலைவர்களூம், திரையுலக பிரபலங்களூம் வந்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்கள்.

Advertisment

படப்பிடிப்பில் டேராடூனில் இருந்ததால் நடிகர் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரிடம், அவ்வப்போது கலைஞரின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்துகொண்டார்.

டேராடூனில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் இருந்தார் ரஜினி. அங்கே, ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரையிலும் கலந்துகொண்டு, அவர் நடிக்க வேண்டியது இருக்கிறது. ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து, படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு டேராடூனில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக காவேரி மருத்துவமனைக்கு இரவு 8.50 மணிக்கு வந்தார். காவேரி மருத்துவமனையில் கலைஞரை பார்த்து அவரின் நலம் அறிந்தார்.

Advertisment

rk2rk3rk4rk5