a

ஐம்பதாவது சர்வதேச திரைப்பட விழா இன்று கோவாவில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBLEE விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப்பச்சன் இருவரும் இணைந்து இவ்விருதினை ரஜினிகாந்துக்கு வழங்கினர்.

Advertisment

இவ்விருந்தினை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் பேசியபோது, ‘’இந்த சிறப்பு விருதை பெருவதில் மகிழ்ச்சி. இவ்விருதை அளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ்மக்களுக்கும் நன்றி.

Advertisment

இந்த விருதினை, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.