சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தஇன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதிஇருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள்ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாருஎன் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்துஎடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது. தனக்கு நேர்மையானவன்,துணிவானவன், அச்சப்படாதவன்அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.
எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான்சொன்னார். ஏன் சொன்னார்அவர்தான் தமிழன். அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.
என்றார் நகைச்சுவையாக.