அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் 'லம்போகினி' சொகுசு காரை ஓட்டிச்செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் பயணத்தில் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில்அவர் இ-பாஸ் பெற்று பயணித்தாரா எனசர்ச்சைகள் எழுந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கப்படும் என சென்னைமாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர்ரஜினிகாந்த் உரிய முறையில்அனுமதி பெற்றுத்தான்கேளம்பாக்கம் சென்றுள்ளார் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு ஆட்சியரிடம் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றது ஆய்வில் தெரியவந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.