Advertisment

ரஜினிகாந்த் டயலாக்கை பேச மறுத்த விஜய்சேதுபதி!

v

ரஜினி மாதிரி எனக்கு நடிக்கத்தெரியாது. ரஜினி பேசுவது மாதிரி எனக்கு மிமிக்ரி கூட தெரியாது. நான் நானாகத்தான் நடிப்பேன்; பேசுவேன் என்று பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவை பரபரக்க வைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.

Advertisment

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்த சசிகுமார், பாபிசிம்ஹா இருவரும் மேடையில் பேசியபோது, தாங்கள் ரஜினிக்கு தீவிர ரசிகர் என்பதை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சசிக்குமாரையும், பாபி சிம்ஹாவையும் ரஜினியின் டயலாக்கில் பிடித்ததை பேசச்சொன்னபோது, அண்ணாமலை படத்தில் தொடையை தட்டி ரஜினி பேசுவது மாதிரி பேசிக்காட்டிவிட்டு, யார் இந்த டயலாக்கை பேசினாலும் அது ரஜினி சார் பேசியது மாதிரி ஆகாது என்றார் பாபி சிம்ஹா. தளபதி படத்தில் வரும் ’நட்புன்னா என்னன்னு தெரியுமா, நண்பன்னா என்னன்னு தெரியுமா, சூர்யான்னா தெரியுமா ’என்கிற வசனத்தைப் பேசிக் காட்டினார்.

Advertisment

இதே போல் விஜய் சேதுபதியிடம், உங்களுக்கு பிடித்த ரஜினி டயலாக் ஒன்றை பேசுங்கள் என்று கேட்டபோது, ‘’எனக்கு வராது’’ என்றார். மீண்டும் அவரிடம், ரஜினி சார் படத்திலிருந்து ஏதாவது ஒரு டயலாக் சொன்னால் போதும் என்றபோதும், ‘’எனக்கு ரஜினி சார் மாதிரி நடிக்கத்தெரியாது. அவர் மாதிரி மட்டுமல்ல யார் மாதிரியும் எனக்கு நடிக்கத்தெரியாது. நான் நானாகத்தான் நடிப்பேன்; பேசுவேன். நடிக்க வாய்ப்பு கேட்ட போன போது கூட யார் மாதிரி நடிச்சு காட்டப்போறீங்க என்று கேட்டதும், எனக்கு யார் மாதிரியும் நடிக்க தெரியாது. ரஜினி சார் பேசுவது மாதிரி கூட எனக்கு மிமிக்ரியும் தெரியாது என்று சொல்லிவிட்டேன். அதுதான் அவர்களுக்கும் பிடித்தது. அதனால் எனக்கு ரஜினி சார் மாதிரி பேச வராது...விட்டுடுங்க...’’என்று கூறி, அரங்கை பரபரக்க வைத்தார்.

p

மேலும் அவர் விழாவில் பேசியபோது, ‘’நான் காணாத கணவு ஒன்று நினைவு ஆகியிருக்கிறது. இந்த மனுசனோட (ரஜினி) எல்லாம் சேர்ந்து நடிப்பேன்னு நான் நினைச்சு கூட பார்த்தது கிடையாது. அவர் அடிக்கடி வானத்தை பார்த்து ஆண்டவன் இருக்கிறான் என்று சொல்லுவார். உண்மையில் அவர் உழைப்பார்த்து அந்த ஆண்டவனே கை தட்டுவான். நேத்து வந்தவன் நான். எனக்கே சில சமயங்களில் எதுக்கு அப்படி என்று ஒரு மிதப்பு வரும். ரஜினி சார் மாதிரி எனக்கும் அர்ப்பணிப்போட வேலை பார்க்க வேண்டும் என்கிறதை அந்த ஈடுபாட்டை அந்த ஆண்டவன்தான் தரணும் என்று வானத்தை நோக்கி கைநீட்டி பேசினார்.

Vijay Sethupathi rajinikanth petta
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe