Advertisment

அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்கிறாரா ரஜினி? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ரஜினிக்கு இடமில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக, ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவோம் எனக்கூறும் ரஜினிகாந்த் அதிமுகவுடன் கூட்டணியாகவும் இருக்கலாம் அல்லது அவர் அதிமுகவில் கூட இணையலாம் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், மதுரையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,

அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அதிமுகவில் தொண்டராக இணைந்துதான் படிப்படியாக முன்னேற முடியும் என அவர் கூறியுள்ளார்.

sellur raju rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe