EVKS-RAJINI 

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கரூர் அருகே உள்ள புலியூர் செட்டிநாடு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது,

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷனை கவர்னர் நியமித்தார். அந்த விசாரணை கமி‌ஷன் எந்த உண்மையை கண்டுபிடித்தது என தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது சோனியா காந்தி உடனே அவரை பதவியில் இருந்து நீக்கினார். அதே போன்று மோடியும் தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்கவேண்டும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மாவோயிஸ்டுகள் பிரதமர் மோடியை கொல்ல முயற்சி செய்தாலும் தவறுதான். அவர்களை அடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மாணவர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தகூடாது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தமிழக அரசின் செயல்பாடு ஜீரோவாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுருட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பதவியில் உள்ள நீதிபதியே ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஒப்பானது என கூறியுள்ளார். அதனை புதிதாக முளைத்துள்ள அரசியல் தலைவர் என சொல்லிக் கொள்பவர் (ரஜினி) அதில் பயங்கரவாதிகள் பங்கேற்றனர் என கூறியுள்ளார். தற்போது அவர் நடித்த படம் வெளியாகிவிட்டது. இனி அடுத்த படம் வெளியாகும் போது தான் அவர் பேசுவார் என நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.