Advertisment

’’ரஜினி வேடிக்கை காட்டுகிறார்’’- திருநாவுக்கரசர் பேச்சு

thiru

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற அடுத்த நாளே மோடி அலை ஒய்ந்து ராகுல் காந்தி அலை நாடு முமுவதும் வீசி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவா் திருநாவுக்கரசா் கூறினாா்.

Advertisment

குமாி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரா்கள் கலந்தாய்வு கூட்டம் திக்கணங்கோட்டிலும், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரா்கள் கலந்தாய்வு கூட்டம் நாகா்கோவிலும் நடந்தது. இதில் திக்கணங்கோட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருநாவுக்கரசா்....தமிழகத்தில் காமராஜா் ஆட்சி மலர வேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறாா்கள் . அதற்கு காங்கிரசாா் எல்லோரும் அதிகளவு கட்சிக்காக உழைக்க வேண்டும். அந்த உழைப்பும் உணா்வும் தமிழகத்திலே குமாி மாவட்ட காங்கிரசாருக்கு மட்டும் தான் இருக்கிறது என்று இங்கிருக்கிற கூட்டம் உணா்த்துகிறது.

Advertisment

அதே போல் அரசியலில் விழிப்புணா்வு பெற்ற மாவட்டமும் குமாி தான். தமிழகத்தில் அற்புத ஆட்சி நடத்திய காமராஜாின் மனபுண்ணுக்கு மருந்து போட்டு குணமாக்கியதும் குமாி மண் தான்.

தற்போது நாடு முமுவதும்மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீசி வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றது தான் மோடி அலை ஓய்வுக்கு காரணமாகி விட்டது. அரசியல் வியாபாரம் செய்து நாட்டை விற்கும் மோடிக்கு பதிலடி கொடுக்க தான் ராகுல் காந்தி காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்றாா்.

thiru1

இந்தியாவில் மோடிக்கு சிம்மசொப்பனமாக இருக்க கூடிய ஒரே தலைவா் ராகுல் காந்தி தான். பா.ஜ.க வை வீழ்த்த வல்லமை படைத்த ஒரே கட்சியும் காங்கிரஸ் தான். மூன்றாவது அணி நாலாவது அணி என்றெல்லாம் பேசுகிறாா்கள். அந்த அணிகள் உருவானால் ஒரு காலத்திலயும் வெற்றியும் பெறாது ஆட்சியையும் பிடிக்காது. அதெல்லாம் ஆறு மாதம் தான்.

பட்டியல் இனத்தவருக்கும்சிறுபான்மையினருக்கும் எதிராகவே மோடியும் அவருடைய ஆட்சியும் செயல்படுகிறது. கா்நாடகாவில் 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட சிறுபான்மையினருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கவில்லை.

இங்கு பேசிய சிலா் நான் முதல்வராக வேண்டுமென்று பேசினாா்கள். நான் இல்லை காங்கிரஸ் தொண்டன் யாா் இருந்தாலும் உழைத்தால் எதுவும் நடக்கும். யாருக்கு எப்பஎன்ன நடக்கும்னு தொியாது. ஜெயலலிதா இறந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவாா் என யாருக்காவது தொியுமா? 25 போ் கொண்ட ஓரு பூத் கமிட்டி அமைக்க முடியாதவா்களுக்கு எதற்கு கட்சி. அவா்கள் யாராக இருந்தாலும் நீக்கி விடுவேன்.

ரஜினி காந்த் 30 போ் கொண்ட பூத் கமிட்டி அமைத்து ஒண்ணரை கோடி பேரை சோ்த்தால் தான் கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்றிருக்கிறாா். அவரும் வேடிக்கை தான் காட்டுகிறாா்’’ என்றாா்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ க்கள் ராஜேஷ் குமாா், பிாின்ஸ், விஜயதரணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Speech Tirunavukkarar shows rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe