சென்னையில் கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்தபடி இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக சுகாதாரத் துறை.

Advertisment

 Rajini praises Siddha doctor

சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு சில அனுமதி தந்துள்ளது எடப்பாடி அரசு.அதன்படி சென்னையில், சில பகுதிகளில் சித்த மருத்துவச் சிகிச்சை முகாம் அமைத்து, கரோனா பாதிப்புள்ள பலருக்கும் சிகிச்சை அளித்து வருகிறார். குறிப்பாக, பல்வேறு மூலிகளைப் பயன்படுத்தி சித்த மருத்துவச் சிகிச்சை கொடுக்கிறார் வீரபாபு.

Advertisment

 Rajini praises Siddha doctor

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி குணமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்த நடிகர் ரஜினி, வீரபாபுவை தொடர்பு கொண்டுபேசியுள்ளார். அப்போது, " உங்களைப் பற்றியும் உங்களின் சித்த மருத்துவச் சிகிச்சை பற்றியும் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். மக்களுக்குச் சிறப்பான சேவை செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் " எனப் பேசியுள்ளார் ரஜினி.