rajini political entry trichy fan anger

Advertisment

ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்த ரஜினி ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே, 'நந்தி' கோவில் தெருவில், ரஜினி பேனரை எரித்துகோபத்துடன் திட்டிவிட்டுச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவார் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று (29.12.2020), ‘உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சித் தொடங்கவில்லை, அரசியலுக்கு வரமாட்டேன்’ என அறிவித்தார் ரஜினிகாந்த். இந்த அறிவிப்பைக் கேட்டு, தமிழகத்தில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால், ரஜினி ரசிகர்கள் சோகத்துடன் செய்வதறியாமல் இருந்துவந்தனர். இதில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, ஆண்டாள் தெருவில் வசிக்கும் ரஜினி ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம், ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்து ஆத்திரம் தாங்காமல், நந்தி கோவில் அருகே, ரஜினியின் பேனரை எரித்தார். மேலும், ரஜினி இத்தனை காலம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இப்படி ஒரு அறிவிப்பைக் கேட்டு பெரும் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறி,கடுமையான சொற்களால்திட்டி பேனரை எரித்துவிட்டுச் சென்றார்.