புத்தாண்டு ஸ்பெஷல்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்

Rajini met the fans outside the house and said New Year wishes

2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதால், நாடு முழுவதும் ஆங்கிலப்புத்தாண்டை பொதுமக்கள்கோலாகலமாகக்கொண்டாடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனாவிற்கு முந்தைய உற்சாகத்துடன் நாட்டுமக்கள் குடும்பத்துடன் கேக்வெட்டி ஆட்டம், பாட்டம்எனக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள்,முக்கியப் பிரமுகர்கள்,திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தங்களதுவாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த்புதிய ஆண்டில் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில்,உன் வாழ்க்கைஉன் கையில் என்றஹேஷ்டேக்கைபயன்படுத்தி அனைவருக்கும் தனதுபுத்தாண்டுவாழ்த்துகளைத்தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி ரஜினிகாந்தை பார்ப்பதற்காக அவரது போயஸ் கார்டன்வீட்டின் முன்புரசிகர்கள் திரண்டனர். இதையடுத்து அவர்களைச்சந்திக்க வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களைப் பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe