Advertisment

இணையத்தில் பரவும் கட்சியின் பெயர்... ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்...

rajini makkal mandram statement

Advertisment

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் பதிவான கட்சி ரஜினியுடையது என்று தகவல் வெளியானது. மேலும் மக்கள் சேவைக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகியான வி.எம். சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்'.என விளக்கமளித்துள்ளார்.

Actor Rajinikanth rajini makkal mandram statement
இதையும் படியுங்கள்
Subscribe