Advertisment

ரஜினி மக்கள் மன்றத்தினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் இணையலாம்..!

Rajini makkal mandram people can resign and join any party ..!

ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சி ஆரம்பிக்கப்போவதில்லைஎனகடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி ரஜினி அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் சிலர் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும்எனபோராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ரஜினி திட்டவட்டமாக ‘நான் கட்சி ஆரம்பிக்கவில்லைஎனதெரிவித்துவிட்டேன். மேலும் இதுபோன்ற போராட்டங்களை நடத்தி என்னைவேதனைக்குள்ளாக்காதீர்கள்’ எனதெரிவித்திருந்தார்.

Advertisment

இதையடுத்து நேற்று தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களின் ரஜினி மக்கள் மன்றமாவட்டச் செயலாளர்கள், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதேபோல் வேறு சில நிர்வாகிகள் அ.தி.மு.க.விலும் இணைந்தனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அவர்கள் விரும்பினால், ரஜினி மக்கள்மன்றத்தில் இருந்து தங்கள் பதவியைஇராஜினாமாசெய்துவிட்டு, அவர்கள் விரும்பும் எந்த கட்சியிலும் இணைந்துகொள்ளலாம். அதேசமயத்தில் அவர்கள் எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பதை மறக்கக்கூடாது” எனதெரிவித்துள்ளார்.

rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe