Advertisment

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை!

rajini makkal mandram leaders instruction

பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவர் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25- ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது; பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற தலைமை எச்சரித்துள்ளது. ஊழலை ஒழிக்கவே கட்சித் தொடங்கப்படுகிறது; பதவி தவிர பணம் பெறக்கூடாது.மேலும், சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்கவும் நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

rajini makkal mandram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe