rajini-stalin-kamal

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவச் சிலை நாளை (ஞாயிறு) மாலை திறக்கப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கலைஞரின் சிலையை திறந்து வைக்கிறார்.

மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், சோனிய காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிணராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இதேபோல் இந்த விழாவுக்கு திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக நேற்று இரவு ரஜினி தகவல் சொல்லியுள்ளாராம். இதேபோல் கமலும் இந்த விழாவில் கலந்து கொள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் திமுக தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Advertisment

Advertisment