Advertisment

ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் இனிப்புகள் வழங்கியும், கோவில்களில் வழிபாடுகள் நடத்தியும் ரஜினி பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் போயஸ்கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இனிப்பு வழங்கினார். அப்போது அவர் வந்திருந்த ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் தங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.