Advertisment

ரஜினி எங்கே? அஜித் எங்கே? -ரசிகர்களின் போட்டா போட்டி!

r

ரஜினியின் பேட்டயும் அஜித்தின் விஸ்வாசமும் வசனத்தின் மூலம் ட்ரைலரில் மோதிக்கொண்டது தற்செயலாகத்தான்(?) நடந்திருக்கும். ஆனால், ட்ரைலரைப் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பெற்றது விஸ்வாசம். மீம்ஸ் வேறு உசுப்பேற்றிவிட, அஜித் ரசிகர்களுக்குப் போஸ்டர்கள் வாயிலாக மதுரையில் பதிலடி தந்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

Advertisment

r

‘அரசியல் என்றாலும், சினிமா என்றாலும் யாருக்கும் நாங்க (ரஜினி ரசிகர்கள்) போட்டி இல்ல.. ஆனா.. நாங்க இல்லாம இங்கே போட்டியே இல்ல..’ என்றும், ‘எதிரின்னு யாரையும் இவரு (ரஜினி) நெனச்சதில்ல! இவரை எதிரியா நினைச்ச யாரும் நிலைச்சதில்ல!’ எப்போதும் தலைவராட்டம் தொடரும்…’ என்றும், காளியின் வேட்டை! ஆளப்போறார் நாட்டை!’ என்றும் போஸ்டர்கள் அடித்து மதுரை முழுவதும் ஒட்டி பரபரப்பு கிளப்பியிருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

Advertisment

mm

இரு படங்களின் ரிலீஸ் தேதியும், பொங்கலும் நெருங்கிவிட்ட நிலையில், பொதுவான பார்வையில் ரஜினி மற்றும் அஜித் குறித்து நம்மிடம் பேசினார்கள் மதுரை சினிமா ரசிகர்கள்.

“ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் வெளியான ஆண்டு 1975. அவர் பிரதான வில்லன் பாத்திரத்தில் நடித்த மூன்று முடிச்சு வெளியான ஆண்டு 1976. அதேபோல், அஜித் முதலில் சிறுவேடத்தில் நடித்த என் வீடு என் கணவர் ரிலீஸான ஆண்டு 1990. அவர் பிரதான பாத்திரத்தில் நடித்த அமராவாதி வெளியான ஆண்டு 1993. ரஜினி பிறந்த ஆண்டு 1950 என்றால், அஜித் பிறந்த ஆண்டோ 1971. ஆக, வயதில் 21 வருட வித்தியாசத்திலும், சினிமாவில் 15 வருட வித்தியாசத்திலும் ஜூனியராக இருக்கிறார் அஜித். ரஜினியின் 165-வது படம் பேட்ட. அஜித்துக்கு விஸ்வாசம் 59-வது படம். வெற்றிப்படங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், ரஜினியை நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறார் அஜித்.

r

தன்னைப் போலவே, எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்தவர் என்பதால், அஜித்தை ரஜினிக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், ஒரே நேரத்தில் இருவரின் படங்களும் மோதிக்கொள்வதால், ரசிகர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டிருப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 68 வயதை நிறைவு செய்த நிலையிலும் கலைத்துறையில் இன்றும் சூப்பர் ஸ்டாராகவே திகழ்கிறார் ரஜினி.

திரைத்துறையில், 68 வயதிலும் கதாநாயகனாகவே நடித்து, அதுவும் உச்சத்தில் ரஜினி நிற்பது, மிகப்பெரிய சாதனைதான். மொத்தத்தில் ரஜினி எங்கே? அஜித் எங்கே? திரைத்துறையில் அஜித் இன்னும் எவ்வளவோ வளர வேண்டியது இருக்கிறது. அவர் வளரட்டும்! வாழ்த்துவதற்கு சினிமா ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.” என்றனர் பொதுவான மனநிலையில்.

கலைத்துறையில் அஜித், விஜய் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் கடுமையாக ‘ட்ஃப்’ கொடுத்துவருபவர் ரஜினிகாந்த் என்பதில் அவருடைய ரசிகர்களுக்குப் பெருமிதம்தான்! அதனால்தான், இன்றும் அவரைக் கொண்டாடுகின்றனர்.

rajini ajith
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe