கடந்த பொங்கலன்று ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும்,அஜித் நடித்த விசுவாசம் திரைப்படமும் ஒன்றாக வெளி வந்து இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதில் பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜும், விசுவாசம் படத்தை சிறுத்தை சிவாவும் இயக்கினர்.இந்த இரண்டு படங்களுமே பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தது இவர்கள் யாரை இயக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு உருவானது.

Advertisment

rajini

இந்த நிலையில் ரஜினி இன்று தனது இல்லத்தில் சிறுத்தை சிவாவை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது என்றும் சொல்லப்படுகிறது.இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.