Advertisment

’அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன்; பாரதிராஜா என்னை தலைவர் என அழைப்பார் ’- ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனால், அவர் அரசியலுக்கு வந்தால், நான் எதிர்திசையில் இருப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த், பாரதிராஜா தன்னை தலைவர் என அழைப்பார் என்று கூறியுள்ளார்.

Advertisment

r

திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாக்யராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Advertisment

rk5

விழாவில் கலைஞானத்திற்கு தங்கச்சங்கிலி அணிவித்து பேசிய ரஜினிகாந்த் , ’’கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ இருக்க முடியாது. நான் ஹீரோ ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. பைக், வீடு இருந்தால் போதும் என்றுதான் இருந்தேன். அப்படிப்பட்ட மனநிலையில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது கலைஞானம் சார் என்னை திடீரென்று பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க அழைத்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.

kr

பைரவி படத்திற்கு பின்னர் நானும் கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கலைஞானம் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது. வருத்தமாக உள்ளது. கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சொன்ன அமைச்சருக்கு நன்றி. அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன். கலைஞானத்திற்கு நானே வீடு வாங்கித்தருகிறேன்.’’என்று தெரிவித்தார்.

r

மேலும், பாரதிராஜாவுக்கும் எனக்கும் கருத்துக்கள், எண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் எங்கள் நட்பு என்றும் மாறாது. பாரதிராஜா தனிமையில் என்னை சந்திக்கும்போது தலைவர் என அழைப்பார். உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று சொல்லுவார்’’ என்று தெரிவித்தார்.

rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe