ADVERTISEMENT

 7 பேர் பற்றிய கேள்வி - செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினி 

11:34 AM Nov 13, 2018 | rajavel



சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்த ரஜினியிடம், 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டார். எந்த 7 பேர் என்று அவர் கேட்டதால் விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை அவர் சந்திக்கிறார்.


சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த விபரம்:-

ADVERTISEMENT

செய்தியாளர் : 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை குடியரசுத் தலைவர் கவனத்திற்கே கொண்டு போகாமல் மத்திய...

ADVERTISEMENT

ரஜினி : எந்த 7 பேர்?

செய்தியாளர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

ரஜினி : எனக்கு அது தெரியவில்லை... இப்பதான் வந்திருக்கிறேன்....

செய்தியாளர் : 7 பேர் விடுதலையில் உங்களது நிலைப்பாடு என்ன?

ரஜினி : இப்பதான் அதனை கேட்கிறேன்.

செய்தியாளர் : தமிழ்நாட்டில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து...

ரஜினி : இதற்கு கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அதோடு மட்டுமல்ல, உடனடியாக அதனை அமல்படுத்த வேண்டும்.

செய்தியாளர் : பணமதிப்பிழப்பு அமல்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?


ரஜினி : அந்த நடவடிக்கையில் மத்திய அரசு அமல்படுத்தியதில் தவறு நடந்துவிட்டது. அது விரிவாக பேச வேண்டிய விஷயம்.

செய்தியாளர் : பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி உருவாக்க வேண்டும் என்று முயற்சி நடைபெறுகிறது. பாஜக அந்த அளவுக்கு ஆபத்தான கட்சியா?

ரஜினி : அப்படியென்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்ப டெஃபனிட்டா அப்படித்தானே இருக்க முடியும்.

இவ்வாறு பதில் அளித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT