Skip to main content

பேட்டி வாங்கலியோ பேட்டி! ரவுண்டு கட்டி அடிக்கும் ராஜேந்திரபாலாஜி!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இந்தத் தேர்தல் களத்தில் பேட்டி என்ற பெயரில்,  ஒவ்வொரு நாளும் தினுசுதினுசாகப் பேசி வருகிறார். விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி என, போகும் இடமெல்லாம் இஷ்டத்துக்குக் கொட்டித் தீர்க்கிறார். ஆவேசமாகவும் காமெடியாகவும் பேசினாலும் யதார்த்தம் உள்ளதால் சுவாரஸ்யமாக இருக்கிறது.  செய்தியாளர்கள் கேள்விக்குமேல் கேள்வி கேட்டாலும், சளைக்காமல் பதிலளிக்கிறார். இன்று அவர் எடுத்துவிட்ட அரிய பெரிய கருத்துக்களைப் பார்ப்போம்.  

 

r

 

ஓட்டுக்காக ராகுல்காந்தி சொல்லும் பொய்! 
    
மாசம் ஆறாயிரம் ரூபாய்ன்னா.. வருஷத்துக்கு எழுபத்திரண்டாயிரம்.. ஓஹோ.. யாருக்கு தரப்போறாங்க? இப்படியே பேசிக்கிட்டிருந்தா.. நாங்க ரெண்டு லட்சம் தருவோம்னு சொல்லிருவோம். ஏமாத்துறதுக்கு ஒரு அளவு வேண்டாமா? மாசம் ஆறாயிரம் கொடுக்க முடியுமா? கஜானால எங்கே பணம் இருக்கு. பணம் இருந்தா சொல்லணும். எங்கே பணம் இருக்கு? இன்னைக்கும் எல்லா பட்ஜெட்டும் துண்டு பட்ஜெட்தான் போட்டுக்கிட்டிருக்காங்க. பற்றாக்குறை பட்ஜெட்தான் போட்டுக்கிட்டிருக்காங்க. ராஜீவ்காந்தி (ராகுல்காந்தியின் தந்தை பெயரைத் தவறாகக் குறிப்பிடுகிறார்.) சொல்லுறது மிகப்பெரிய மோசடி.. சீட்டிங்.. 72000 ரூபாய் வருஷத்துக்கு எப்படி கொடுக்க முடியும்? ஏழை மக்களை, எளிய மக்களை, விவசாய மக்கள்கிட்ட பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்க பார்க்கிறாரு. 

 

மோடி எத்தனை மோடியடி!

மோடி வந்து இந்தியாவுடைய கதாநாயகன். இந்தியாவைப் பாதுகாக்கக்கூடிய ஒரு ஸ்டண்ட் மாஸ்டர். இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால், மல்லுக்கட்டக்கூடிய ஒரு மல்யுத்த வீரர் நரேந்திரமோடி. அவரை எதிர்க்கக்கூடியவர்களுக்கு, சமூக விரோதிகளுக்கு, அவர் வில்லனாத் தெரியுறாரு. அதுக்கு நம்ம என்ன செய்யமுடியும்?

 

கடவுள் விஷயத்தில் ஏமாற்றுகிறார் மு.க.ஸ்டாலின்!

கடவுளை வேண்டுவது பாராட்டுக்குரியது. ஒரு நம்பிக்கையோடு அந்தம்மா வேண்டுறாங்க. அவங்க ஜெயிக்கிறாங்க.. தோற்கிறாங்க.. அதுவேற விஷயம். கடவுள் மேல பக்தியுள்ள கலைஞரோட மனைவியாரே வந்து வணங்குறது ஒரு திருப்புமுனைதான். தயாளு அம்மாவும் பெரிய செந்துருக்கப்பொட்டு வச்சிருக்காங்க. அவங்களும் கடவுளைத்தான் வணங்குறாங்க. கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு ஸ்டாலின் போன்றவர்கள் ஏமாத்து பண்ணுறாங்க. அதெல்லாம் வீரமணியெல்லாம் தாலி அறுக்கிறாரு. தாலி அறுக்கிறவரை கூட வச்சிக்கிட்டு ஓட்டு கேட்டுப்போனா.. யாராச்சும் ஓட்டு போடுவாங்களா? எந்தப் பெண்ணாவது ஓட்டு போடுமா?

 

ra

 

வைகோவிடம் பிளாக்மெயில்!

மு.க.ஸ்டாலினை என்ன சொன்னாரு? கவுன்சிலர் தேர்தல்ல நிக்கிறதுக்குக்கூட உனக்குத் தகுதி கிடையாது. உன் கட்சிய அழிக்கிறதுதான் என் வேலை. தமிழர்கள் சாவுக்குக் காரணம் நீதான். முள்ளிவாய்க்கால்ல தமிழர்கள் சாவுக்குக் காரணம் காங்கிரஸ்தான்னு சொன்ன எத்தனை சிடி எங்ககிட்ட இருக்கு. போட்டுக் காட்டவா? ஸ்டாலினைப் பத்தி அவரு பேசினத. அதுனால வைகோ சொல்லுறத யாரும் பொருட்படுத்த வேண்டாம். அவர் ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டாரு. அது என்ன இக்கட்டுன்னு நாங்களும் தேடிக்கிட்டிருக்கோம். வைகோ எதுல சிக்கிட்டாருன்னு தெரியல. அவரை ஏதோ பிளாக்மெயில் பண்ணிக் கிட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். பிளாக்மெயில் பண்ணித்தான் அவரை இப்படி பேச வைக்கிறாங்க. 

 

சர்வாதிகாரி தினகரனை குடும்பத்தினரே மதிப்பதில்லை!

குக்கர் கேளுங்க. மக்கர் கேளுங்க. இல்லைன்னா தொப்பி கேளுங்க. டிவிகூட கேளுங்க. என்னமும் கேளுங்க. அவங்கபாட்டுக்கு தனித்தனிச் சின்னத்துல நிற்கட்டுமே. அவங்களுக்கு திறமை இருக்குல்ல. ஒண்ணுல வடைச்சட்டில நிற்கட்டும். ஒண்ணுல தென்னை மரத்துல நிற்கட்டும். சின்னத்தை பத்தி பிரச்சனை கிடையாதுன்னு சொல்லிட்டருல்ல டிடிவி. அவரு என்ன புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரா? அவரு குடும்பத்துல மாமனே இவரை  மதிக்கமாட்டாரு. டிடிவிய அவரு மாமன் மதிக்கமாட்டாரு; மச்சான் மதிக்கமாட்டாரு. அவரு குடும்பத்துல யாரு இவரை மதிக்கிறாங்க? டிடிவி தினகரன் ஒரு சர்வாதிகாரி மாதிரி நடந்துக்கிட்டிருக்காரு. அவருகூட இருக்கிற ஆளுங்க நொந்துபோய் கிடக்கிறாங்க. அவங்கள பூராம் மெஸ்மரிசம் பண்ணி.. நீதான் எம்.எல்.ஏ., நீதான் மந்திரி.. நீதான் பொதுப்பணித்துறை மந்திரி.. நீ உள்ளாட்சித்துறை மந்திரி.. நீ சமூக நலத்துறை மந்திரி.. பொம்பளையாள பார்த்தா சமூக நலத்துறை மந்திரி. ஆம்பளையாள பார்த்தா பொதுப்பணித்துறை மந்திரி. என்னது? இப்படியே சொல்லி ஆளாளுக்கு மந்திரி.. மந்திரின்னு கனவு கண்டுக்கிட்டு ட்ரெயின்லபோயி முட்டிக்கிட்டிருக்கான். 

 

v

 

என் சொத்து உனக்கு; உன் சொத்து எனக்கு! 

என் சொத்து எல்லாத்தயும் சாத்தூர் அமமுக வேட்பாளர் சுப்பிரமணிக்கு எழுதிக் கொடுத்துடுறேன். அவரோட பினாமி சொத்தையெல்லாம் எனக்கு எழுதிக்கொடுக்கச் சொல்லுங்க. நான் ஏற்கனவே வந்து.. முன்னாடி கட்டுன வீட்டுலதான் குடியிருக்கேன். என் வீடு எவ்வளவு பெரிசுன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். பத்து பேருதான் உட்காரலாம். அவருக்கு ஏழுமாசம் எம்.எல்.ஏ.வா இருந்துட்டு எவ்வளவு சொத்து. சும்மா சொல்ல வேண்டியதுதான் குற்றச்சாட்டுன்னு. அவரைப் பத்தி அவங்க கட்சிக்காரங்களுக்கே தெரியும். யாருக்கும் கடுங்காபி வாங்கித்தர மாட்டாரு. பணம் கொடுத்தா ஓடியே போயிருவாரு. கொடுக்கிற பதவியை ஏத்துக்கிருவாரு. யாரு கூட கேட்கிறாங்களோ வித்திருவாரு.  

தேர்தல் சீசனில் கே.டி.ராஜேந்திரபாலாஜி போன்றவர்களின் பேச்சு வாக்காள பெருமக்களுக்கு  ‘டைம்பாஸ்’ ஆக இருக்கிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.