பண மோசடி புகாரில் தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேடப்பட்டு வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரியமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வரும் நிலையில், அவர் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 6ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.