Rajendra Balaji took the college students who were involved in accident to hospital

ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் சிவா மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, ஈஞ்சார் சந்திப்பு பகுதியில் தனது மனைவியுடன் டூவீலரில் வந்துகொண்டிருந்தார் கணேஷ் பாண்டி. இரண்டு டூவீலர்களும் நேருக்குநேர் மோதியதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வரும் சாலையில் கிடந்துள்ளனர்.

Advertisment

அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசிக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்துகொண்டிருந்த ராஜேந்திரபாலாஜி, காயம்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்ததும் காரை நிறுத்தினார். அவருடன் வந்த விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் வி.எம்.விஜய் ஆனந்த் முதலுதவி சிகிச்சையளித்தார்.

Advertisment

Rajendra Balaji took the college students who were involved in accident to hospital

தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிட,காயமடைந்தவர்களை தனது காரிலும் உடன் வந்தவர்களின் கார்களிலும் ஏற்றி,சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ராஜேந்திரபாலாஜி. ஆனாலும், படுகாயமடைந்த கல்லூரி மாணவர் செல்வகுமார் உயிரிழந்தார்.