Advertisment

விபத்தில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த ராஜேந்திர பாலாஜி!  

Rajendra Balaji rescued the accident victim and sent him for treatment

Advertisment

விருதுநகரில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிவிட்டு,சிவகாசி – திருத்தங்கல்லில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்தார் ராஜேந்திர பாலாஜி.அப்போது, விருதுநகர் – சிவகாசி சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவர் சாலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்தவுடன் காரிலிருந்து இறங்கியராஜேந்திர பாலாஜி, அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, தன்னுடன் இருந்த அதிமுகவைச் சேர்ந்த மருத்துவர் விஜய் ஆனந்த் மூலம் முதலுதவி சிகிச்சைஅளிக்கச் செய்து,விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நிலையிலும் முதலுதவி கிடைக்கப் பெற்றவர் கையை அசைத்து ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவிக்க, அவரிடம்‘எல்லாம் நல்லாயிரும்..’ என்று கூறிய ராஜேந்திர பாலாஜி ஆம்புலன்ஸ்காரரிடம் ‘இவரை எங்கே கூட்டிட்டு போறீங்க?’ என்று கேட்க, அவர் ‘திருத்தங்கல்லுக்கு..’ என்று கூற, ‘விருதுநகர்அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க..’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

hospital Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe