நீங்க லாட்ஜ்ஜில இருப்பீங்க... நாங்க ரோட்டுல நிக்கணும்... அமைச்சருக்கு எதிராக திரண்ட மக்கள் 

RAJENDRA-BALAJI

கஜா புயல் தாக்கி ஏழு நாட்கள் ஆகியும் மின்சாரம் கிடைக்காததால் மன்னார்குடியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் பிரச்சனைகள் இன்னும் சரி செய்துதரப்படவில்லை. இந்த நிலையில் மன்னார்குடி தெற்கு வீதி உள்ளிட்ட பெரும்பலான இடங்களில் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டனர். அப்போது சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ''நீங்க லாட்ஜ்ஜில இருப்பீங்க... நாங்க ரோட்டுல நிக்கணுமா'' என்று பொதுமக்கள் திரும்ப கேட்டனர்.

Protest

ஆய்வு செய்வதாக கூறி வந்த அமைச்சர்கள் விடுதியில் சொகுசாக தங்கிவிடுகிறார்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலைக்குள் மின்சாரம் சரி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தப் பின்னர் மக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

gaja storm Mannargudi rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe