
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி.சிவகாசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மேலும், அதிரடியாகப் பேசிவந்த அவர், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மிக அமைதியானார்;தான் முன்னர் பேசியதற்கு கூடவருத்தம்தெரிவித்திருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், அங்கேயே தங்கியுள்ளார். இதற்கிடையே, அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக இதுவரை யாரும் எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
எனினும்,பாஜக தலைவர் நட்டா முன்னிலையில்அவர் பாஜகவில் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், பாஜகவில் இணைவது அரசியல் ரீதியாக தன்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில்அவர் இந்த முடிவை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)