Skip to main content

எடப்பாடியின் ஆண்மைத்தனமான முடிவு! தினகரன் வாயைக் கிழித்திருப்பார் ஜெ.! -கெத்து காட்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜி! 

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவரது பேட்டி இதோ - “அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றதில் மிகப்பெரிய வெற்றி. அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி போன்றவற்றை பார்வையிட்டாம். பால்வளத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம், பசு வளர்ப்பு இனவிருத்தி,  தீவன உற்பத்தி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த மிகப்பெரிய பால் பண்ணை அமைக்கப்படும். லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா உள்ளிட்ட மாகானங்களுக்குச் சென்று கால்நடை வளர்ப்பினைப் பார்த்து, அதேபோல் தமிழகத்தில் ஊட்டி,  கொடைக்கானல், சேலம் போன்ற மலைப் பிரதேசங்களில் மிகப்பெரிய பால் பண்ணை அமைப்பதன் மூலம், தமிழகத்தில்  பால் புரட்சி ஏற்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.  நிதானமாக, வலுவாக, தரமானதாகப் பணிகள் அமையும்.
 

rajendra balaji

 

 

ஸ்டாலினைத் தவிர சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வரவேற்கிறார்கள். காரணம் -  பொறாமை, இயலாமை, தங்களால் முடியாததை எடப்பாடி செய்துவிட்டார் என்பதுதான்.    எடப்பாடி வெளிநாட்டுக்குச் சென்று 2850 கோடி அளவில் தமிழகத்திற்கு முதலீடை ஈர்த்துள்ளார். எடப்பாடியின் முடிவை, தமிழகத்தின் வளர்ச்சியை அனைவரும் போற்றுகிறார்கள். 23 ஆண்டுகால வரலாற்றில் எடப்பாடி முதலமைச்சராக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொழில் முதலீட்டை பெற்றுள்ளார். இதனை, ஸ்டாலினைத் தவிர அனைவரும் வரவேற்கிறார்கள்.  

துபாய்க்குச் சென்றபோது நடுஇரவிலும் தமிழர்கள், வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்கள் அனைவரும் எங்களை வரவேற்றார்கள். முதலமைச்சர் எடப்பாடியின் நடவடிக்கை ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. செம்மொழி மாநாட்டைப் போல, மெரினாவில் திரிந்தவர்களை் எல்லாம் கோட் சூட் போட்டு உட்கார வைத்தது போல இல்லாமல் உண்மையான தொழிலதிபர்கள் கலந்து கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஆகும். முதலமைச்சர் எடப்பாடி ஆண்மைத்தனமான முடிவு எடுக்கிறார். தன் வாழ்க்கையை.. தியாக வாழ்க்கையாக வாழ்ந்து, தமிழ்நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இது, தமிழகம் கண்டிராத வரலாற்று திருப்புமுனை. சட்டசபையில் ஸ்டாலின் பேச முடியாமல் வெளியே சென்று வெள்ளை அறிக்கை கேட்கிறார். தமிழை விற்று தமிழர்களை ஏமாற்றி நாடகம் நடத்தி அரசியல் செய்தவர் ஸ்டாலின். இது எடப்பாடி ஆட்சி. அவரது நாடகம் எடுபடாது. 

இன்னும் பல தொழில் அதிபர்கள் தமிழகத்திற்கு வந்து தொழில் தொடங்குவார்கள். வேலையில்லாத பல இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்டாலின் துணை முதல்வராக இருந்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடன் உடனடியாக தொழில் துவங்க முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ஆனால்.. ஸ்டாலின் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடுகிறார். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணை துவங்கப்படும். சிவகாசியில் நறுமண பால் பண்ணை துவங்கப்படும். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் நாற்பதாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மேலும் ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் தினகரன் எம்ஜிஆர் ரசிகர் இல்லை. சிவாஜி கணேசன் ரசிகர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து வளர்த்த அதிமுகவை அவர் எதிர்க்கிறார். அதிமுகவின் எதிரியான திமுகவிடம் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார் அவருடைய உண்மையான ரூபம் தெரிந்துதான் நாஞ்சில் சம்பத் அவரை விட்டுச் சென்றுவிட்டார். புகழேந்தி புலம்பிக் கொண்டுள்ளார். அவரே திமுகவிற்குச் சென்றாலும் செல்வார். தற்போது அம்மா இருந்திருந்தால் தினகரன் வாயைக் கிழித்திருப்பார். தினகரன் கூடாரம் காலியாகி விட்டது. இது எடப்பாடி பூமி. எடப்பாடி ஆட்சியை மக்கள் அனைவரும்  போற்றுகிறார்கள்.” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.