Advertisment

‘அதிமுக சார்பில் மத்தியில் ஆட்சி அமையும்...’- ராஜேந்திர பாலாஜி

raju balaji

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமா் மோடி இந்தியாவின் டாடியாக உள்ளதால் அவரை கண்டு தீவிரவாதிகள் பயந்து ஓடுகிறார்கள். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் கூட்டணி முடிவு இன்று அல்லது நாளை தெரியவரும். அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக சார்பில் மத்தியில் ஆட்சி அமையும். அதில் அதிமுக அமைச்சர்கள் பங்கு பெறுவார்கள். அதிமுக ஆல மரம். அதில் உட்காருந்து பழம் பறிக்கலாம். தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் ஒரு கூட்டணி, திமுக சார்பில் ஒரு கூட்டணி. எனவே தேர்தலில் இருமுனை போட்டிதான் நடைபெறும். தேர்தல் களத்தில் டிடிவி காணாமல் போய் விடுவார். அதிமுக கூட்டணியை உடைக்க யாருக்கும் திராணி இல்லை. சாணக்கிய தனமும் இல்லை. 7 பேர் விடுதலையில் முட்டுகட்டை போட்டு திமுகவும், காங்கிரஸும் நாடகம் ஆடி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Advertisment

rajendra balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe