Advertisment

சிதம்பரத்தில் ராஜராஜ சோழன்  திருமுறை கண்டெடுத்த விழா; ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்பு!

Rajaraja Cholan  triple discovery ceremony at Chidambaram

சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டம் சார்பில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த21-ம் தேதி காலை திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுரத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகளில் ராஜராஜசோழன் உற்சவர் திருமேனியுடன் அடியார்கள், திருமுறையுடன் சென்ற வீதி உலா நடைபெற்றது.

Advertisment

பின்னர் மாலை திருக்கடையூரில் சிறப்பு அபிஷேக, ஆராதனை முடிவுற்று சிதம்பரத்திற்கு அடியார்கள் அன்று (செப்.21) இரவு சிதம்பரம் வருகை புரிந்தனர். பின்னர் திருமுறை கண்டெடுத்த விழா சிதம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராஜராஜசோழன், நம்பியாண்டார்நம்பி திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisment

Rajaraja Cholan  triple discovery ceremony at Chidambaram

நடராஜர் கோயில் த.செல்வரத்தின தீட்சிதர், எஸ்.யு.ஐயப்ப தீட்சிதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை சிவலோக திருமடம் தவத்திரு வாதவூரடிகள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார், இந்து முன்னேற்றக்கழகத் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்று பேசினர். குளித்தலை சு.ராமலிங்க சுவாமிகள் வாழ்த்துரையாற்றினர். விழாவில் சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜா தீட்சிதர், விஸ்வ ஹிந்து பரிஷத் கடலூர் மாவட்ட தலைவர் ஜோதி.குருவாயூரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

Rajaraja Cholan  triple discovery ceremony at Chidambaram

ஞாயிறு இரவு 8மணியளவில் திருமுறைகள் நடராஜர் சன்னிதியில் வைத்துப் படைக்கப்பட்டு கிழக்கு கோபுர வாயிலிருந்து, ராஜராஜசோழன் திருமேனியுடன் திருமுறை வீதி உலா புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விழா மண்டபத்தைச் சென்றடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு பீடாதிபதி அனுகூலநாத ராஜசேகர் அடிகளார் தலைமையில் சிவனடியார்கள் திருவாரூர் கார்த்தி, சென்னை ஜெகன், ஈரோடு வெங்கடேசன், திருவாரூர் மாரிமுத்து, திருவாரூர் ஜெயராம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe