Advertisment

தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது இல்லை: நீதிபதிகள் வேதனை!

rajaraja cholan madurai high court judges

Advertisment

ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க அனுமதி அளிக்கக் கோரி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (08/12/2020) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மகாராஷ்டிராவில் ஆட்சி செய்த மன்னர் சிவாஜியை அங்குள்ள மக்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். மேலும்,சுற்றுலாத்துறை செயலாளர், கலாச்சாரத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

judges madurai high court Rajaraja Cholan
இதையும் படியுங்கள்
Subscribe