Advertisment

தங்கையின் நல்வாழ்வுக்காக கொலை செய்த அண்ணன்கள்!

ddd

யாரோ செய்த தவறுக்குக்குடும்பபாசத்தின் காரணமாக யார் யாரோ கொலைக் குற்றவாளிகள் ஆகின்றனர். ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூரிலும், அப்படி ஒரு கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

மயில் என்பவர் மூர்த்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார். மயிலின் வாழ்க்கையில் ரவி என்பவன் குறுக்கே வந்தான். முறை தவறிய உறவு பிறந்தது. இது மயிலின் குடும்பத்துக்குப் பெரிய அவமானமாக இருந்தது.இதனால், அவரது அண்ணன் செந்தில்குமாரும் குடும்பத்தினரும் ரவியையும், மயிலையும் கடுமையாக எச்சரித்தனர்.

Advertisment

மயில் திருந்திய நிலையில், ரவி தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளான். மயில் எதிர்ப்பு தெரிவித்தும், ரவி விடவில்லை. இந்த விவகாரம், அண்ணன் செந்தில்குமாருக்குத் தெரியவர, கடை வீதியில் நின்றுகொண்டிருந்த ரவியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.

சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமாரையும் அவரது சகோதரர் செல்வத்தையும் கைது செய்தனர்.

உடன் பிறந்த தங்கையின் தவறான பழக்கத்தைக் கண்டித்த விவகாரம் கொலையில் முடிந்து, அவரது சகோதரர்களை சிறையில் தள்ளியிருக்கிறது.

BROTHERS Rajapalayam sister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe