Skip to main content

காங்கிரஸிலிருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023
Rajaji's great-grandson who defected from the Congress

 

காங்கிரசின் முன்னோடி தலைவர்களில் ஒருவரானவரும் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வராகவும் இருந்த ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரசிலிருந்து அதிருப்தி காரணமாக வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் முதன்முதலில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர்களில் ஒருவருமானவர் ராஜாஜி. இவரது கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விவகாரத்திலும், குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றியதால் சி.ஆர்.கேசவன் அதிருப்தியிலிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் காங்கிரசின் தனது அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்