ராஜாஜியின் 142- வது பிறந்தநாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார், பாண்டியராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தி.மு.க.வினர் மீது தான் 2ஜி ஊழல் வழக்கு உள்ளது; முதல்வர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. மறைந்த தலைவர் பற்றி அவதூறாக பேசுவது தவறு." என்றார்.